கொரோனா சீனாவின் அவலம்
அனைத்துலக ரீதியில் தற்போது பேசு பொருளாகியிருக்கும் ஒரு விடயம் சீன வைரசு. அதாவது கொரோனா வைரசுவே ஆகும். ஒவ்வொரு புயலுக்கும் சூறாவளிகளுக்குமென்றே பிறப்பிடமொன்று இருப்பது போல இதற்கும் ஓர் பிறப்பிடமுண்டு. சீனாவே அந்த பிரசவத்தை முன்வைத்த பூமி. இதுவரையில் 14 நாடுகளில் தனது ஆதிக்கத்தினை செலுத்தியுள்ள இந்த வைரசு, சீனாவில் மடடும் 840 பேரை குறிவைத்துள்ளதோடு, 80 நபர்களையும் பலியெடுத்துள்ளது. இந்த உலக நாடுகளையெல்லாம் விமானநிலையம் ஈறாக அனைத்து வழித்தடங்களையும் காவல் செய்ய எச்சரிக்கை செய்துள்ள இந்த வைரசு பற்றி இந்த கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக பார்ப்போம்.
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரசானது, 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஹவுகான் நகரிலேயே இதன் பாதிப்பு முதலில் ஏற்பட்டது. இந்த வைரசு தாக்கத்தினால் ஹவுகான் நகரில் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை வலுவேகமாக உயர்வடைந்து வருவதனால் போதிய இடமும்இ மருந்துகளுமின்றி மருத்துவமனைகள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டன. இவ்வாறிருக்க ஹவுகான் நகரத்தையடுத்து சீனாவின் மற்றுமொரு நகரான ஹவாங்காங்க் நகரும் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சீன நகரமாக ஹவுகானில் மருத்துவமனையொன்றை ஆறே தினங்களில் அமைப்பதற்கான பணிகள் வலுவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கொரோணா வைரசு தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கக் கூடிய 1000 நோயாளிகளுக்கு சிகிச்றை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனையொன்றை அமைக்கும் பணியானது 25,000 சதுர கிலோ மீட்டற் பரப்பளவு கொண்ட நிலத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டதை சீன நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட காணொளி காட்சியின் வாயிலான அறியக்கூடியதாகவுள்ளது. ஏலவே 2003 ஆம் ஆண்டு சார்ஸ் வைரசு தாக்கத்தை எதிர்கொள்ள தனது தலைநகர் பீஜிங்கில் வெறும் ஏழே நாட்களில் மருத்துவமனையொன்றை கட்டிய வியக்கத்தக்க அனுபவமொன்றை சீனா தன்வசம் வைத்திருப்பதும் நோக்கத்தக்கது.
சீன அயலுறவுகளுக்கான சபையின் மூத்த உறுப்பினர் கூறுகையில், “சீனா ஏற்கனவே குறுகிய காலத்தில் பல நினைவுச் சின்னங்கள் அமைத்து சாதனை படைத்துள்ளது என்றும் 2003ஆம் ஆண்டு பீஜிங்கில் சார்ஸ் வைரசு பாதிப்பின் போது மருத்துவமனை ஒன்று ஏழே நாட்களில் கட்டப்பட்டது.” என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் சீனாவில் தற்போது கட்டப்பட்டு வருகின்ற மருத்துவமனை முன்பே கட்டப்பட்ட கட்டுமானம் கொண்டு கட்டப்படுகின்றது. இவ்வாறு மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான உரிமங்களையும்இ நிதி தேவைகளையும் சீன அரசாங்கம் சமாளித்துவிடும் என்றும் சரியான நேரத்தில் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்காக கட்டுமான பணியாளர்கள் மற்றும் பொறியிலாளர்கள் சீனா முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தனது கூற்றில் குறிப்பிட்டார்.
சீனாவில் அல்லாமல் வெளிநாடுகளில் மட்டும் 14 நாடுகளில் இதுவரை அண்ணளவாக 500இற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரசு தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, உலக நாடுகள் பலவும் தமது நாடுகளின் உள்நுழையும் அனைவரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளன. இந்த சீன வைரசு தாக்கத்திற்கு அஞ்சி வடகொரியா, தென்கொரியா, ஐப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பலவும் பல முன்னாயத்த நடவடிக்கைகளினை முன்னெடுத்துள்ளன.
எதற்கும் அஞ்சாத வடகொரியா கூட சீன வைரசுக்கு அஞ்சி தனது நாட்டிற்குள் தொற்று ஏற்படுவதை தவிர்க்க வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் வருவதை தடைசெய்துள்ளது. வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுள் பட்டியலிடப்படாத துறைகளுள் சுற்றுலாவும் ஒன்று. வடகொரியாவிற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், சீனாவுடனான எல்லைப்பகுதி வழியாக வருகின்றனர். மேலும் வட கொரிய அரசு ஊடகமான கொரியன் மத்திய தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்வொன்றின் போது சீன வைரசு குறித்தும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதோடு இந்த வைரசு தாக்கத்தை தடுக்க உலக சுகாதார நிறுவனத்துடனும் இணைந்து செயற்படுவதாக வடகொரிய சுகாதார அமைச்சர் அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.
சீனாவிற்கு அருகில் கடலெல்லை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் சீனாவின் ஹவுனான் மாகாணத்திலிருந்து தென்கொரிய தலைநகர் சியோலுக்கு விமானம் மூலம் வந்த பெண் ஒருவருக்கு வைரசு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீன சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது. மேலும் இதனால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதோடு, பொருளாதாரத்திலும் சுற்றுலாத்துறையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானும் வைரசு தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதோடு, அங்கு முப்பது வயதாகும் ஜப்பானிய நபர் ஒருவருக்கு வைரசு தொற்றால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவற்றுக்கிடையில் கனகவா பகுதியை சேர்ந்த ஒரு உணவு பதார்த்த கடைஇ தனது கடைக்குள் சீன சுற்றுலா பயணிகள் வர தடைவிதித்திருப்பதானதுஇ ஜப்பானிய வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
தாய்லாந்திலும் பாத்தோம் மாகாணத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் சீன வைரசு தொற்று ஏற்பட்டுள்ள 73 வயது மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு மூன்று சீன சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் உள்ளிட்ட நால்வருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை பொறுத்த வரையில் இதுவரையில் எவரும் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அறியப்படவில்லை. அந்நாடும் சீனப்பயணிகளை தனிமைப்படுத்தியிருப்பதோடு, உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான செங்கி விமான நிலையம் சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை சோதணை செய்ய பிரத்தியோக ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள 7 பெரிய விமான நிலையங்களில் சீன பயணிகளை பரிசோதிக்க இந்திய விமான போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ள அதே வேளை நாட்டின் துறைமுகங்களில் வந்திறங்கும் நபர்களை பரிசோதிக்க போதுமான வசதிகள் இல்லை என டெல்லியை சேர்ந்த மிண்ட் வர்த்தக நாளிதழிடம் பேசிய சுகாதாரத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவில் கற்கும் இந்திய மாணவர்களையும் அவர்களை பார்க்க செல்பவர்களையும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேச அதிகாரிகள் உச்சக்கட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஆங்கில நாளேடான டாக்கா டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. சீன எல்லையை தாண்டி உலக நாடுகளை உலுக்கி வரும் கொராணா வைரசானதுஇ உலக மக்களிடையே உயிர் பற்றிய அச்சத்தினை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளை சீன பயணிகளையும் மக்களையும் சற்றே விலக்கியும் தனிப்படுத்தியும் வருகின்றது. சீனாவுடன் நில எல்லைகளையும் கடலெல்லைகளையும் பகிர்ந்துள்ள ஆசிய நாடுகள் எவ்வாறு இந்த தொற்றுத் தாக்கத்தினை சமாளிக்கப்போகின்றன என்பது வழமையான விடைகாண முடியா புதிராகவே உள்ளது. ஏனெனில் இதுவரை இந்த நோய்த்தாக்கத்தை கண்டறிய முடிந்துள்ளதேயன்றி அதனை தடுப்பதற்கான மாற்று மருந்துகள் இதுரை கண்டறியப்படாமையே ஆகும்.
சனவரி 26, 2020 அன்று எழுதி முடிக்கப்பட்டது.


Comments
Post a Comment