சிறிலங்கன்சுக்கு எரிபொருளால் வந்த பாசம்

நாங்களும் அழுகிறோம், நீங்களும் அழுகின்றீர்கள் அப்படியென்றால் அது லவ் தானே ஜெசி எண்ட மாதிரி, நாங்களெல்லாம் Sri Lankans என்ற Instant பாச உருட்டல்கள் உலவிக் கொண்டிருக்கின்றது.

உண்மையைச் சொன்னால்
- சிறிலங்காவின் மக்களும்,
- சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் வாழும் மக்களும்,

ஒரே பிரச்சினைகளைச் சந்திக்கின்றோம் அவ்வளவு தான்.


1. தமிழ் சிங்கள் இளைஞர்கள் எல்லாம் ஒன்றாக தான் இருக்கிறோம் என்ற சிறிலங்கன் பாசம், டீசல், மின்சாரம், விலைவாசி ஏற்றத்தால் வந்த திடீர்ப்பாசம், அவையெல்லாம் வந்த பிறகும் இந்தப் பாசம் நீடிக்குமா? நிச்சமாகக் கிடையாது.

2. நாமெல்லாம் Sri Lankans என்றால், தமிழர்களின் அதிகாரங்கள், உரிமைகளை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கலாம் என்றால் ஆமென்பார்களா? - இல்லை, விலைவாசி ஏற்றத்திற்கு நடத்தும் போராட்டங்களை விட பாரிய போராட்டங்களை நடத்துவது அவர்களாக தான் இருப்பார்கள்.

3. ஒரு நூற்றாண்டு காலமாக நாங்கள் அழுது கொண்டு தானே இருக்கிறோம் அப்போதெல்லாம் ஏன்? எங்கள் கண்ணீர் துடைக்க யாரும் வரவில்லை. அத்தனை இலட்சம் தமிழர்கள் உங்களின் சிறிலங்கா ராணுவம் படுகொலை செய்த போது எங்கே போனீர்கள் இந்த சிறிலங்கன்ஸ் எல்லாம். (சிறிலங்கன் எனும் நம்மவருக்கும்)

4. அண்மையில் நடந்த போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்காக, அவர்களின் உரிமை மீறல்களுக்காக 300இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தாக சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டீர்களே!,

அத்தனை இலட்சம் மக்களை பலி கொடுத்து விட்டு தமிழர்கள் அனைத்துல நீதிமன்றங்களை நாடியபோது தூற்றினீர்களே? ஏன் அப்போது உங்களிற்கு மனித உரிமைகள் தெரியவில்லையா? இல்லை தமிழர்களுக்கு உரிமைகள் இல்லையென்று எண்ணி விட்டீர்களா?

யுத்தத்திற்கு பின்னர் கூட வேறெந்த உரிமை மீறல்களும் தமிழர்களுக்கு நடக்கவில்லையா?


----

ஆனால் இப்போது, உங்களுக்குப் பாதிப்பு என்றவுடன் எங்களையும் கூட அழைத்து அழச் சொல்கிறீர்களே? இது எவ்வகையில் நியாயம்.

எமக்கு நீங்கள் இழைத்த பாவத்தின் சாபம் தான் என்று துளியவேனும் மனச்சாட்சியற்று கடந்து போதல் பெருந்தவறு, போகவும் மாட்டோம்.

எதுவானாலும் நாங்கள் நிச்சயம் உங்களுக்கான அழுவோம்.

-
ஏனென்றால்,
நீங்கள் ஒரு வேளை சோற்றிற்கான போராடுகிறீர்கள் !
நாங்கள் எமது பிறப்புரிமைக்காக போராடுகின்றோம் !








Comments

Post a Comment